Created
October 26, 2014 11:03
-
-
Save sundararajana/b7ca467063a9bc2bf101 to your computer and use it in GitHub Desktop.
தேதி தெரிந்தால் அந்நாளின் கிழமை அறிவது எப்படி?
This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
இந்தியாவின் சுதந்திர தினம் என்ன? அது சுலபம்: 15 ஆகஸ்டு 1947. அந்நாளின் கிழமை என்ன? | |
வெள்ளி. தேதி தெரிந்தால் அந்நாளின் கிழமை அறிவது எப்படி? | |
* ஒரு வருடத்தின் பிப்ரவரி கடைசி நாளை "டூம்ஸ்டே" (doomsday) எனக் கொள்வோம். | |
அதாவது பிப்ரவரி 28 அல்லது 29 (லீப் வருடமானால்). "டூம்ஸ்டே"-யின் கிழமை தெரிந்தால் | |
வருடத்தின் எந்த நாளின் கிழமையையும் நாம் கணக்கிடலாம். | |
* டூம்ஸ்டே அன்று என்ன கிழமையோ அதே கிழமை ஏப்ரல் 4, ஜுன் 6, ஆகஸ்டு 8, | |
அக்டோபர் 10, டிஸம்பர் 12 ஆகிய நாட்களிலும் வரும். எ.கா: 2014-ன் பிப்ரவரி 28. | |
அதாவது டூம்ஸ்டே அன்று வெள்ளிக்கிழமை. 2014 டிஸம்பர் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை! | |
அதாவது 2014-ஆம் ஆண்டு 4/4, 6/6, 8/8, 10/10, 12/12 ஆம் தேதிகளும் வெள்ளிக்கிழமையே! | |
* மே 9, ஜூலை 11, செப்டம்பர் 5, நவம்பர் 7 ஆகிய நாட்களிலும் டூம்ஸ்டே கிழமையே! | |
எவ்வாறு நினைவில் கொள்வது? "நான் 7-11 கடையில் 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்கிறேன்" | |
என்பதை நினைவில் கொள்க. அதாவது 7-ஆம் மாதத்தின் 11-ஆம் நாள், 11-ஆம் மாதத்தின் 7-ஆம் நாள், | |
9-ஆம் மாதத்தின் 5-ஆம் நாள், 5-ஆம் மாதத்தின் 9-ஆம் நாள் ஆகிய நாட்களில் டூம்ஸ்டே-யின் கிழமையே | |
வரும். எ.கா: 2014 ஜுலை 11 அன்று வெள்ளிக் கிழமை. | |
* மார்ச்? ஒவ்வொரு மார்ச் 7-ஆம் தேதி டூம்ஸ்டே. அதாவது மார்ச் 7, 2014 அன்று வெள்ளிக் கிழமை. | |
* ஜனவரி? லீப் வருடமானால் 4 ஜனவரி அன்றும், லீப் வருடம் இல்லாவிட்டால் 3 ஜனவரி அன்றும் | |
டூம்ஸ்டே. 2014 ஜனவரி 3-ஆம் தேதி வெள்ளிக் கிழமை. (2014 லீப் வருடம் அல்ல). | |
* இவற்றை வைத்து ஒரு வருடத்தின் எந்த தேதியின் கிழமையையும் அறியலாம்! எ.கா. ஆகஸ்டு 15, 2014-ன் | |
கிழமை என்ன? ஆகஸ்டு 8 அன்று டூம்ஸ்டே. ஆகஸ்டு 15-ம் (7 நாட்கள் கழிந்து வருவதால்) ஒரு | |
டூம்ஸ்டே-தான். ஆக 2014 ஆகஸ்டு 15 அன்றும் வெள்ளியே! 2014 ஜுலை 4 அன்று என்ன கிழமை? ஜுலை 11 | |
அன்று டூம்ஸ்டே. எனவே அன்று வெள்ளி. ஜுலை 4-ஆம் தேதி ஜுலை 11-க்கு 7 நாட்கள் முன்பு வருவதால் | |
அன்றும் வெள்ளியே! 2014 டிசம்பர் 25 என்ன கிழமை? டிஸம்பர் 12 டூம்ஸ்டே. 12 + 7 + 6 = 25. அதாவது | |
டிஸம்பர் 25 ஆம் தேதி வெள்ளியிலிருந்து 6 நாட்களுக்குப் பின் வரும். அதாவது வியாழக்கிழமை. | |
* ஒரு வருடத்தின் டூம்ஸ்டே-யின் கிழமை தெரியாவிட்டால் எவ்வாறு கணக்கிடுவது? நூற்றாண்டின் தொடக்கத்தின் | |
டூம்ஸ்டே தெரிந்தால் எந்த ஆண்டின் டூம்ஸ்டே-யையும் அறியலாம். எப்படி? 2000-ம் ஆண்டின் டூம்ஸ்டே | |
செவ்வாய்க் கிழமை. 2048-ன் டூம்ஸ்டே என்ன? | |
1) கொடுக்கப்பட்ட ஆண்டை நூற்றாண்டிலிருந்து கழிக்கவும்: | |
2048 - 2000 = 48 | |
2) வரும் விடையை 12-ஆல் வகுக்கவும்: | |
48/12 ஈவு: 4 மீதி: 0 | |
3) மீதியை 4-ஆல் வகுக்கவும்: | |
0/4 ஈவு: 0 | |
4) (2)-ல் வரும் ஈவு + மீதி + (3)-ல் வரும் ஈவு ஆகியவற்றை கூட்டவும். | |
4 + 0 + 0 = 4 | |
(4)-ல் வரும் எண்ணை நுற்றாண்டின் டூம்ஸ்டே உடன் கூட்ட கொடுக்கப்பட்ட ஆண்டின் டூம்ஸ்டே | |
கிடைக்கும். அதாவது 2048-ன் டூம்ஸ்டே = 2000-ன் டூம்ஸ்டே + 4 = செவ்வாய் + 4 = சனி. அதாவது | |
2048 பிப்ரவரி 29 அன்று சனிக் கிழமை. | |
இன்னுமொரு எ.கா: 2067-ம் ஆண்டின் டூம்ஸ்டே என்ன? | |
1) 2067 - 2000 = 67 | |
2) 67/12 ஈவு : 5 மீதி 7 | |
3) 7/4 ஈவு : 1 | |
4) 5 + 7 + 1 = 13 | |
2067-ன் டூம்ஸ்டே = 2000-ன் டூம்ஸ்டே + 13 = செவ்வாய் + 13 = செவ்வாய் - 1 = திங்கள்! | |
அதாவது 2067 பிப்ரவரி 28 அன்று திங்கட்கிழமை. | |
* சரி. நூற்றாண்டின் தொடக்க ஆண்டின் டூம்ஸ்டே-யை எவ்வாறு அறிவது? மனப்பாடம்தான் ;-) | |
1700 - ஞாயிறு | |
1800 - வெள்ளி | |
1900 - புதன் | |
2000 - செவ்வாய் | |
400 ஆண்டுகளுக்குப் பிறகு சுழற்சியாக திரும்ப வரும். | |
2100 - ஞாயிறு | |
2200 - வெள்ளி | |
2300 - புதன் | |
2400 - செவ்வாய் | |
.... | |
* முழு எ.கா: காந்தி பிறந்த கிழமை என்ன? காந்தி பிறந்த தினம் அக்டோபர் 2, 1869. | |
* 1869-ஆம் ஆண்டின் டூம்ஸ்டே | |
1869 - 1800 = 69 | |
69/12 ஈவு : 5 மீதி = 9 | |
9/4 ஈவு : 2 | |
5 + 9 + 2 = 16 | |
1869-ன் டூம்ஸ்டே = 1800-ன் டூம்ஸ்டே + 16 = 1800-ம் டூம்ஸ்டே + 2 = வெள்ளி + 2 = ஞாயிறு | |
* அக்டோபர் 10 டூம்ஸ்டே. அப்படியானால் அக்டோபர் 2 எட்டு நாட்கள் முன்பு. | |
அதாவது ஞாயிறு - 8 = சனி! | |
* காந்தி பிறந்தது சனிக்கிழமை! | |
* http://www.timeanddate.com/calendar/?year=1869 | |
* மற்றுமொரு முழு எ. கா: டாக்டர் அம்பேத்கர் பிறந்த கிழமை என்ன? அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14, 1891 | |
* 1891-ஆம் ஆண்டின் டூம்ஸ்டே | |
1891 - 1800 = 91 | |
91/12 ஈவு : 7, மீதி: 7 | |
7/4 ஈவு: 1 | |
7 + 7 + 1 = 15 | |
1891-ன் டூம்ஸ்டே = 1800-ன் டூம்ஸ்டே + 15 = வெள்ளி + 15 = வெள்ளி + 1 = சனி. | |
* ஏப்ரல் 4 அன்று டூம்ஸ்டே. அதாவது 1891 ஏப்ரல் 4 அன்று சனி. அப்படியானால் | |
ஏப்ரல் 14 = ஏப்ரல் 4 + 10 = சனி + 10 = சனி + 7 + 3 = சனி + 3 = செவ்வாய் | |
* டாக்டர் அம்பேத்கர் பிறந்தது செவ்வாய்க்கிழமை! | |
* http://www.timeanddate.com/calendar/?year=1891 | |
என்ன யோசிக்கிறீங்க? உங்க திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாட்கள் ஆகியவற்றின் கிழமைகளை | |
கணக்கிட்டு எல்லாரையும் அசத்துங்க! என்ன தேதி நினைவில்லையா? அப்ப சரி உங்களுக்கு "டூம்ஸ்டேதான்", | |
வழக்கம்போல வீட்ல வாங்கி கட்டிக்குங்க ;-) | |
நன்றி: http://rudy.ca/doomsday-other-years.html |
Sign up for free
to join this conversation on GitHub.
Already have an account?
Sign in to comment
http://rudy.ca/doomsday.html